தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு வாழ்த்து தெரிவிக்கும் தமிழகத் தலைவர்கள்

சென்னை

தெலுங்கானா மாநில ஆளுநராகத் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக  நியமிக்கபட்டுளார். இதையொட்டி அவர் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். தெலுங்கானா மாநில ஆளுநராகத் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளதையொட்டி தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொலைபேசி மூலம் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  . மேலும் அமமுக தலைவர் டிடிவி தினகரன், சிபி ராதாகிருஷ்ணன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிடோர் வாழ்த்துச் செய்தி அளித்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் தமிழிசையை எதிர்த்துப் போட்டியிட்டு வென்ற திமுகவைச் சேர்ந்த கனிமொழி, “தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாழ்த்துக்கள். அவர் தெலுங்கானா மக்களுக்காகச் சிறப்பாக பணியாற்றுவார் என  நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, “அரசியலில் எங்களுக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் எனது அன்பு மகள் தமிழிசைக்கு வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.