நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல்: தமிழக தேர்தல்ஆணையர் தகவல்

சென்னை:

மிழகத்தில்  உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பு மே மாதம் இறுதியில் வெளியாகும் என தமிழக தேர்தல்ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் முடிவடைந்த பிறகுதான் உள்ளாட்சி தேர்தல் குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக  உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத தால் மக்கள் நலப்பணிகள் பாதிப்படைந்து உள்ளன. இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டிருந்தது.

ஆனால், உயர்நீதி மன்ற உத்தரவு படி உள்ளாட்சி வார்டு மறுவரையறை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக தேர்தலை நடத்த முடியாத சூழல் நிலவி வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து வருகிறது.

தற்போது வார்டு வரையறை பணிகள் முடிவடைந்து, மாவட்டந்தோறும் ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான்,

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருப்பது மற்றும் வாக்காளர் பட்டியல் விவரம் தயார் செய்தல் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும்,   இதுவரை 22 மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்கள் முடிவடைந்துள்ளன. மேலும், 10 மாவட்டங் களில் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற இருக்கறிது என்றும் கூறினார்.

உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்கு, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும்,  உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்யும் நேரடி தேர்தல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் துணைத் தலைவர்களை தேர்வு செய்யும் மறைமுகத் தேர்தல் உள்பட அனைத்து நடைமுறைகளும் ஜூலைக்குள் முடிவடைந்துவிடும் என்று தெரிவித்தார்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வர இருப்பதால், அதற்கான பணிகள் முடிவடைந்த பிறகே உள்ளாட்சி தேர்தல் குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதன் காரணமாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மேலும் கால தாமதம் ஏற்படுவது உறுதியாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி