வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை

மிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம் என சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில்  வெப்பம் மக்களை கொடுமையாக வாட்டி வருகிறது. அதுவும் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடும் வெப்பம் நிலவி வருகிறது.

ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் திருவண்ணாமலை, வேலூர், திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் வெப்பம் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகம் இருக்கும் என எச்சரித்து இருந்தது.

தற்போது வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி