சென்னை:
கொரோனா பாதிப்பை குறைக்க சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ளதாகவும்   மருத்துவக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொற்று பரவல் வீரியமாகி வருகிறது.
இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  இன்று காலை  தலைமை செயலகத்தி மருத்துவ குழுவினனரை  சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  இன்று ஐந்தாவது  முறையாக நடைபெற்ற இந்த கூட்டம் சுமார் ஒரு மணி நேரம்  நடைபெற்றது. அப்போது, கொரோனா பரவல் தடுப்பு,  ஊரடங்கு கட்டுப்பாடு குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ குழுவைச் சேர்ந்த டாக்டர்  குகானந்தம் கூறுகையில்,  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.  ஏற்கனவே கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டு பிறகு குறையும் என்று கூறியிருந்தோம். அதுபோல நடைபெறும் வாய்ப்பு உள்ளது. தற்போது உச்சத்தை தொட்டுள்ளதால், இனி குறையத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இருந்தாலும்,  மூன்று மாதங்களுக்குப் பிறகு அதன் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறியவர்கள்,  பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.
அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி யைப் பின்பற்றுதல் போன்றவற்றை முறையாக பின்பற்றினால் மட்டுமே கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதால், பொது முடக்கத்தை தீவிரப்படுத்த முதல்வரிடம் பரிந்துரை செய்திருப்பதாகவும், இதுகுறித்து தமிழக அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றனர்.
தமிழகத்தில் தற்போதைய நிலையில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட  ஆக்ஸிஜன் சிலிண்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிகமாக பரிசோதனை மேற்கொள்ளும் போது, பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஆனால், உயிரிழப்புகளைக் குறைக்க மேலும் அதிக அளவில் பரிசொதனையை மேற்கொள்ள வேண்டும்.
காய்ச்சல், தொண்டை வலி போன்றவை ஒரே நாளில் இருந்து பிறகு சரியானாலும், அது கொரோனா தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்  என்று கூறியவர்கள்,  பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது, இதுபோன்ற அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம் மக்களை கேட்டுக்கொண்டது.
ஒருவருக்கு ஒரு நாள் காய்ச்சல் ஏற்பட்டு, மறுநாள் குணமடைந்தாலும், அந்த நபர் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ உதவியை நாட வேண்டும். உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு உடனே மருத்துவ சேவை மற்றும்  ஆக்சிமீட்டர் பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தவர்கள்,  தமிழகத்தில் தற்போது 75,000 படுக்கை வசதிகள் தயாராக உள்ளன என்றும், தலைவலி காய்ச்சல் ஏற்பட்டால் அலட்சியப்படுத்த வேண்டாம்.

பரிசோதனைகளை அதிகரிப்பது; மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவது போன்ற எங்களின் பரிந்துரைகளை ஏற்று அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.