சென்னை

மிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்ணன் மகன் செல்வம் இன்று  முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

அஇஅதிமுக வின் மூத்த உறுப்பினரான கே ஏ செங்கோட்டையன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பில் உள்ளார்.

இவரது அண்ணன் மகன் கே ஏ கே செல்வம் தமிழ்நாடு மருந்து விற்பனையாளர் சங்க மாநில தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.

செல்வம் இன்று மாலை 7 மணிக்கு மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

அவர் தி,முக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரோடு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் ஏற்பாட்டிலிந்த இணைப்பு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழக ஆளும் கட்சியான அதிமுக அரசின் மூத்த அமைச்சரின் உடன் பிறந்த அண்ணன் மகன் திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.