தமிழக அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம்

சென்னை

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார்.

தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆயினும் அவர் உடல்நிலையில் தொடர் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.

இன்று மாலை 6.30 மணிக்கு அவர் உடல்நிலை குறித்து காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்

“தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் பாதிக்கப்பட்டு நியுமோனியா பாதிப்பும் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகி உள்ளது.

அவரது முக்கிய உடல் உறுப்புக்களைச் செயல்பட வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

அவர் அதிகபட்ச உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் இருந்து வருகிறார்.

இன்னும் 24 மணி நேரச் சிகிச்சையின் போது அவருடைய உடலில் ஏற்படும் முன்னேற்றத்தை வைத்து எதுவும் கூற முடியும்”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.