அமைச்சர் ஜெயக்குமார் உதவியாளர்  சாலை விபத்தில் பலி

மிழக அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளர் மற்றும் அவரது மகன்கள் உட்பட ஐவர் சாலை விபத்தில் பலியானார்கள்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளர் கே.ஆர். லோகநாதன். . இவர் தனது குடும்பத்துடன்   திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கரூரில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது வேப்பூர் அருகே கார் பயணித்துக்கொண்டிருந்தபோது,  முன்னால் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென இடதுபுறமாக திரும்பியது.

இண்டிகேட்டரை இயக்காமலும், சமிஞ்சை செய்யாமலும் அரசுப் பேருந்தை, ஓட்டுநர் திருப்பியதாக கூறப்படுகிறது. அப்போது பின்புறம் அதிவேகமாக வந்த லோகநாதனின் கார், அரசுப் பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் லோகநாதன், உள்ளிட்ட ஐவர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த லோகநாதனின் மனைவி ஷாலினி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதே காரில் பயணித்த லோகநாதனின் 2 வயது மகன் ரக்சன் எவ்வித காயங்களும் இல்லாமல் உயிர் தப்பினார்.

இந்த விபத்து தொடர்பாக  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். .