அமைச்சர் செல்லூர் ராஜு அப்போலோவில் திடீர் அனுமதி !

சென்னை:

மிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செல்லூர் ராஜு, இன்று காலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள  அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அவரது உடல்நிலை குறித்து, அதிமுகவோ, தமிழகஅரேசோ எந்தவித தகவல்களையும் தெரிவிக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.