மதுரை எம்.பி.யை மிரட்டும் அமைச்சர்’’..

மதுரை எம்.பி.யை மிரட்டும் அமைச்சர்’’..

மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.யை , வருவாய் துறை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில்,’’ மதுரையில் கொரோனா வைரஸ் அதிகரித்துள்ளது என முதல் –அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்குக் கடிதம் எழுதியதால், எங்கள் எம்.பி..வெங்கடேசனை அமைச்சர் உதயகுமார் மிரட்டுகிறார்’’ எனத் தெரிவித்துள்ளார்.

‘’ மதுரை மக்களைப் பாதுகாக்கும் எண்ணத்துடன் வெங்கடேசன் , முதல்வருக்குக் கடிதம் எழுதினார். இதனால் ,அவர் மீது, ‘மக்களைப் பீதிக்கு ஆளாக்கியதால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதயகுமார் மிரட்டுகிறார்’’ என்று அந்த அறிக்கையில்  பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஏற்பட்டுள்ள நிலை மதுரையில் நிகழாத வண்ணம் தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ளப்படும்  என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி இருப்பதைத் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள கே.பாலகிருஷ்ணன்,’’ ஆனால் ஆர்.வி.உதயகுமாரோ, எங்கள் எம்.பி.யை… மிரட்டுகிறார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

-பா.பாரதி.