ரஜினிகாந்த் கருத்தை வரவேற்ற தமிழக அமைச்சர்!

--

துரை

டிகர் ரஜினிகாந்தின் நதிகள் இணைப்பு குறித்த கருத்து வரவேற்புக்குரியது என தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் செல்லூர் கே. ராஜு.    தமிழக அமைச்சர்களில் பலர் நடிகர் ரஜினிகாந்த் கருத்துக்களை எதிர்த்து வரும் நிலையில் இவர் அதை வரவேற்றுப் பேசி உள்ளார்.   நேற்று மதுரை மேற்கு சட்டப்பேரவை தொகுதியில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் ஆய்வு நடந்தது.  ஆய்வில் கலந்துக் கொண்ட பின் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளரகளை சந்தித்தார்.

அப்போது அவர், “நடிகர் ரஜினிகாந்த் தென் இந்திய நதிகள் இணைப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.  அவரது கருத்தை நாங்கள் வரவேற்கிறோம்.   தமிழக மக்கள் அனைவருமே நதிநீர் இணைப்பை விரும்பி வரவேற்பார்கள்.   ஆனால் நதிநீர் இணைப்பு வேறு, அரசியல் வேறு என்பதை ரஜினிகாந்த் புரிந்துக் கொள்ள வேண்டும்” என கூறி உள்ளார்.