ஓய்வூதியம் பெறுவோர்: ஆயுள் சான்றிதழை அரசு சேவை மையங்களில் பெறலாம்..!

சென்னை,

மிழகத்தில் பென்சன் வாங்கும் நபர்கள் அரசின் சேவை மையங்களில் தங்களுக்கான ஆயுள் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு கேபிள் நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் 486 அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மையங்கள், பட்டா மாற்றுதல், வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் போன்ற பல்வேறு வகையான அரசு சான்றிதழ்களை  எளிதாக பெற முடியும்.அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் கட்ட முடியும்.

e-seva

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் வருடாவருடம் ஆயுள் சான்றிதழ் அந்த பகுதி வட்டாட்சியரிடம் இருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும். தற்போது அதை எளிதாக்கும் வகையில் தமிழக அரசு இ.சேவை மையம் மூலம் ஆயுள் சான்றிதழ் (living certificate) பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளது.

இனிமேல், பென்சன் வாங்கும் நபர்கள் ,தங்களுக்கான ஆயுள் சான்றிதழை இனி அரசு சேவை மையங்களில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இதன்படி பென்சன்தாரர்கள் அருகிலுள்ள சேவை மையத்தை அணுகி தங்களுடைய ஆதார் எண், கைரேகை பதிவு மற்றும் அவர்கள் பயன்பெற்று வரும் பென்சன் திட்டம் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும்.

இதனை சரிபார்த்த பின்பு 10 ரூபாய் கட்டணத்தில் அவர்களுக்கு ஆயுள் சான்றிதழ் அளிக்கப்படும்.

தமிழக அரசின் இந்த சேவை மையங்களில் சாதி சான்றிதழ் தொடங்கி வருமான வரிச் சான்றிதழ் வரை அனைத்து வகையான அரசின் சான்றிதழ்களையும் பெற முடியும். மேலும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் செலுத்த முடியும்.