சென்னை:

காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி வரைவு அறிக்கை தாக்கல் செய்ய கொடுக்கப்பட்டுள்ள கெடு முடிவடைய உள்ள நிலையில் மேலும் 2 வார கால அவகாசம் கேட்டு உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

இதற்கு மக்கள் நீதிமய்யம் தலைவர் நடிகர் கமலஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல்,மீண்டும் தாமதம் செய்கிறது மத்திய அரசு. “தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசின் காலம் தாழ்த்தும் நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசின் இந்த எதேச்சதிகார போக்கு தமிழக மக்களிடையே மீண்டும்  கொந்தளிப்பான நிலையை உருவாக்கி உள்ளது.