தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் 30ந்தேதி வெளியீடு

சென்னை:

மிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 30ந்தேதி காலை 9 மணிக்கு வெளியாகும் என்று தமிழக தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

மாணவர்கள் தமிழக தேர்வுத்துறை அறிவித்துள்ள இணையதளத்தில் தங்களது மார்க் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

http://www.tnresults.nic.in , ‘

http://www.dge1.tn.nic.in ,

http://www.dge2.tn.nic.in  இந்த இணையதளங்களில் மாணவ மாணவிகள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

பிளஸ் 1 விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு ஜூன் 2, 4ல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்து உள்ளது.

இதில், வெற்றி பெறும் மாணவர்கள் மட்டுமின்றி, வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர்களும் அடுத்து பிளஸ் 2 வகுப்புக்கு சென்றுவிடலாம். வரும் ஜூலையில் நடக்க உள்ள சிறப்பு துணை பொதுத் தேர்வில் அந்தப் பாடங்களை எழுதி வெற்றி பெறலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் போலவே, பிளஸ் 1 தேர்வு முடிவுகளும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதும், மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) மூலம் அனுப்பப்படும்.

தேர்வு முடிவு வெளியான பின்னர், அனைத்து மாணவர்களுக்கும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அளிக்கப்படும். அவர்கள், பிளஸ் 2 தேர்வை முடித்ததும். இரு தேர்வுகளின் மதிப்பெண்கள் அடங்கிய தொகுப்பு மதிப்பெண் பட்டியல் (Consolidated Marksheet) வழங்கப்படும்.