சென்னை:

மிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காலை திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டார். அங்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும்,  ஆந்திர, மே.வ. கவர்னர்களும்  திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர். மத்திய அரசின் அழைப்பின் பேரில் இவர்கள் டில்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்த நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு மேலோங்கி வருகிறது.  அதிமுக கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிட்ட பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அந்த கூட்டணியில் தேனி தொகுதியில் மட்டும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார் இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த நில நாட்களாக பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஆளும் அதிமுக கட்சிகளுக்குள்ளும் முட்டல் மோதல் தொடங்கி உள்ளது பூதாகரமாகி உள்ளது. இதனால் காரணமாக எடப்பாடி அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

இந்த பரபரப்பான  சூழ்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டார். அங்கு பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேவேளையில், 7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்றத்திற்கு பதில் கூற வேண்டியதிருப்ப தால், அதுதொடர்பாக ஆலோசனை நடத்தவும் அவர்கள் டில்லி சென்றுள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

அதேவேளையில்,  ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் நடந்த சட்டசபை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து ஜெகன் முதல்வரானார்.

மேற்கு வங்க மாநிலத்திலும் லோக்சபா தேர்தலில் குறிப்பிடத் தகுந்த வெற்றியை பாஜக வெற்றி பெற்றது. அதன்பின் அங்கு பாஜ- திரிணாமுல் தொண்டர்களிடையே மோதல் நீடித்து வருகிறது.

இந்நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், ஆந்திர கவர்னர் நரசிம்மன், மேற்கு வங்க கவர்னர் கே.என். திரிபாதி ஆகியோர் டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் டில்லி விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அங்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.