தமிழக நிலவரம்: உள்துறை அமைச்சருடன் ஆளுநர் மீண்டும் சந்திப்பு

--


டில்லி,

மிழகத்தில் நடைபெற்று வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மாலை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் தமிழகம் வருகிறார்.

தமிழக அரசியல் சூழல் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இன்று மீண்டும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்து பேசினார்.

எடப்பாடி அரசுக்கு எதிராக செயல்பட்டு, எடப்பாடியை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் கடிதம் கொடுத்த 18 டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள்  18 பேரை தகுதி நீக்கம் சபாநாயகர் தனபால் உத்தர விட்டார்.

சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு  தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று தமிகம் வருவதாக இருந்த ஆளுநர் சென்னை வருவதை ரத்து செய்துவிட்டு, நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் மாலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சூழ்நிலையில் இன்று காலை ஆளுநர் சென்னை வருவார் என எதிர்பார்த்த நிலையில்,  மீண்டும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

பரபரப்பான அரசியல் சூர்நிலையில், இன்று மாலை அவர் தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.