நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு….!

2015 – 2018-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களின் பதவிக்காலம் முடிந்தும் நடிகர் சங்கக் கட்டிட வேலைகள் நடைபெற்று வருவதால் தேர்தலை 6 மாதங்களுக்குத் தள்ளி வைத்தனர்.தற்போது அந்த காலக்கெடுவும் முடிவடைந்துவிட்டதால், தேர்தல் நடத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தேர்தலை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கபட்டார்.

இந்நிலையில், இன்று (மே 28) நீதிபதி பத்மநாபன் ஜூன் 23-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Nadigar Sangam, Nasar, producer council, vishal. election
-=-