தமிழகத்துக்கு தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வருகை

சென்னை

கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்துக்கு இன்று தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன.

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது  எனவே தமிழக அரசு அதிக அளவில் பரிசோதனை நடத்த வசதியாக பரிசோதனைக் கருவிகள கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் ஏற்கனவே தமிழக அரசு 5.6 லட்சம் பிசிஆர் சோதனைக் கருவிகளைக் கைவசம் வைத்துள்ளது.  தென்கொரியாவில் இருந்து மேலும் 10 லட்சம் கருவிகள் கொள்முதல் செயுய தமிழக அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.

அந்த கருவிகளில் இன்று 1 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகத்துக்கு வந்துள்ளது.  எனவே உடனடியாக தமிழகத்தில் கொரோனா  பரிசோதனைகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி