சென்னை: கொரோனா தடுப்பு மருத்துவ பணியாளர்களுக்காக ரூ.129 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல பகுதிகளில் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். முதல்கட்ட பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் தமது வீடுகளுக்கு கூட செல்லாமல் தொடர்ந்து மருத்துவமனைகளிலேயே தங்கி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந் நிலையில், கொரோனா தடுப்பு மருத்துவ பணியாளர்களுக்காக ரூ.129 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அவர்களுக்கு, உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளுக்காக நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. குடிசை பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.1.50 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.