என்பிஆர் படிவத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட கேள்விகள் குறித்து மத்தியஅரசுக்கு கடிதம்! அமைச்சர் உதயக்குமார்

சென்னை:

ன்பிஆர் படிவத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள  தகவல்கள் குறித்து விளக்கம் கேட்டு மத்தியஅரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாக அமைச்சர் உதயக்குமார் தெரிவித்து உள்ளார்.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களுக்கு பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் தேசிய மக்கள் தொகை கண்கெடுப்பு பணி திட்டமிட்டபடி நடைபெறும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் உறுப்பினர் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் உதயகுமார்,  என்பிஆர்  படிவத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள கேள்விகள் குறித்து, தமிழக அரசு விளக்கம் கேட்டு மத்தியஅரசு கடிதம் அனுப்பி உள்ளதாகவும், அதற்கு மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தெரிவித்து உள்ளார்.