சென்னை

மிழக உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்டவற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக் காலம் ஏற்கனவே முடிவடைந்துள்ளது.  அதையொட்டி உள்ளாட்சி அமைப்புக்களின் நிர்வாகத்தை கவனிக்கத் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை ஊரகப்பகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றுள்ளன.  மற்ற ஊராட்சி அமைப்புக்களுக்குத் தேர்தல் நடத்தாததால் பிரதிநிதிகள் இல்லாத நிலை தொடர்ந்து வருகிறது  இதையொட்டி தமிழக முதல்வர் ஊராட்சி அமைப்புக்களை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்குமாறு ஆளுநருக்குப் பரிந்துரை அளித்தார்.

அந்த பரிந்துரையின் அடிப்படையில் ஊராட்சி அமைப்பு சட்டங்கள் மூன்றாம் திருத்த அவசரச் சட்டம் ஒன்றை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிறப்பித்துள்ளார்  இதன்படி பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு அதாவது டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்படுகிறது.