டெல்லி: ஜூலை மாதத்திற்கான 32 டிஎம்சி தண்ணீரை காவிரியில் இருந்து உடனே திறக்குமாறு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.
தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம் மாதத்திற்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.
இம்மாதத்திற்கான கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலாக நடத்தப்படும் இக்கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர். சென்னையில் இருந்தவாறு கூட்டத்தில் திருச்சி மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர், செயற்பொறியாளர், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தண்ணீர் திறந்துவிட தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு இதுவரை 9 டிஎம்சி நீர் தான் கிடைத்து இருக்கிறது என்று தமிழகம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.