தமிழகத்துக்கு ஜூன் மாத நிதிப் பகிர்வு தவணை ரூ.335 கோடி ஒதுக்கீடு

டில்லி

ந்த நிதியாண்டின் ஜூன் மாத நிதிப் பகிர்வு தவணையாக ரூ.335.41 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

மத்திய வருவாயிலிருந்து இந்த 2020-21 ஆம் நிதியாண்டில் அனைத்து மாநிலங்களுக்கும் நிதிப் பகிர்வை மத்திய அரசு அறிவித்து இருந்தது.  தில் தமிழகத்துக்கு ரூ.32,843 கோடி ஒதுக்கீடு செய்ய 15 ஆம் நிதிக்குழுவின் பரிந்துரையின்படி மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இதையொட்டி தமிழகத்துக்கு இதுவரை இரண்டு தவணையாக  நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது   இதில் முதல் தவணையாக ரூ,.1928.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு இரண்டாம் தவணையாக சென்ற மாதம் ரூ.295.25 கோடி ஒதுக்கப்பட்டது.  இதைப் போல் இன்னும் 12 தவணைகளில் மொத்த ஒதுக்கீடும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது 3 ஆம் தவணையாக ஜூன் மாத நிதிப் பகிர்வு தொகையாக ரூ.335.41 கோடியைத் தமிழகத்துக்கு மத்திய அரசு  விடுவித்துள்ளது.  இந்த ஒதுக்கீடு தற்போது கொரோனா நிவாரணத்துக்குப் பயன்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தைப் போல 14 மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.