கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புக்கு அக்டோபர் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 14 உறுப்பு கல்லூரிகளும், 28 இணைப்பு கல்லூரிகளும் உள்ளன. அந்த கல்லூரிகளில் உள்ள 10 இளங்கலை படிப்புகளுக்காக மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றது.

இதுவரை 45,000 மாணவர்கள் விண்ணப்பிக்க, நாளையுடன் அதற்கான காலக்கெடு நிறைவடைகிறது. இந் நிலையில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதியை அக்டோபர் 5 வரை நீடித்து வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தரவரிசை பட்டியல் தேதியும் செப்டம்பர் 29க்கு பதிலாக அக்டோபர் 15க்கு  மாற்றப்பட்டுள்ளதாகவும், பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டித்துள்ளதாகவும் பல்கலைக்கழகம் கூறி உள்ளது.