சென்னை:

2019-20ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணைமுதல்வர் ஓபிஎஸ் தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களுக்கு 4647.50 கோடியில் திட்டம் 38,000 குடியிருப்புகளை அமைக்க திட்டம் செயல்படுத்தப்படும்

சென்னை தவிர்த்த பிற நகரங்களில் 5000 கோடி மதிப்பீட்டில் வீட்டு வசதி திட்டம் தமிழ்நாடு உறைவிட நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது

நகர்ப்புற வறுமை ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது தீனதயாள் உபாத்யாயா, திட்டத்தின்கீழும், தமிழக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்திற்கு நிதி ஒதுக்கீடு

ஒட்டுமொத்தமாக வறுமை ஒழிப்பு திட்டங்களுக்காக 1031.53 கோடி ஒதுக்கீடு

வட சென்னையில் அமைந்துள்ள நிறுவனங்களின் நீர் தேவைக்கு, கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து தர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு 235 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு கீழ் 1 லட்சம் வீடுகள் கட்டித் தர இலக்கு

தமிழகத்தில் 1986 கி.மீ தொலைவில் சாலைகள் மேம்படுத்தப்படும்

உலக வங்கி நிதி உதவியுடன், 2வது கட்ட திட்டப் பணிகள் 1171 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது

தமிழக சாலை மேம்பாடு 459.74 கோடி ஒதுக்கீடு

சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டம் செயல்படுத்தப்படுகிறது

சென்னை சுற்றுவட்ட சாலைக்கு, கடன் உதவி பெற ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையுடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை இந்த திட்டம் சென்னை சுற்றுவட்ட சாலை தரத்தை மேம்படுத்தும்

2019-20ம் ஆண்டில் 206 ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் நபார்ட் வங்கி உதவியின் கீழ் 299.60 கோடி செலவில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் திட்டத்திற்காக ரூ. 13,605.19 கோடி ஒதுக்கீடு