கலைஞர் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்: தமிழிசை

சென்னை:

திமுக தலைவர் கலைஞர் அவர்கள் பூரண நலம் பெற நான் வணங்கும் இறைவனை வேண்டுகிறேன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிறுநீரக தொற்றும் மற்றும் காய்ச்சல் காரணமாக திமுக தலைவர் கருணா நிதிக்கு  அவரது கோபாலபுரம் இல்லத்தில் காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவரது உடல்நிலை தேற அனைத்து தரப்பினரும் வேண்டுதல்  செய்து வருகின்றனர். பல்வேறு  அரசியல் தலைவர்களும் கோபாலபுரம் வந்து கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரித்துச் செல்கின்றனர்.இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிமிழிசையும், திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற வேண்டுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,
‘ நலம் பெற நான் வணங்கும் இறைவனை வேண்டுகிறேன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். TNBJP wishes speedy recovery of DMK leader Kalaignar and pray for the same”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.