சென்னை: முறைகேட்டு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் நடந்துள்ளதாக கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க ஒரு கமிட்டியை அமைத்துள்ளது.

இந்த கமிட்டியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன் போன்றவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் நியாயமானதா? சில கிரிக்கெட் வீரர்கள் மோசடியானவர்களா? கடந்த சீசனில் நடைபெற்ற டி-20 தொடரில் மேட்சி ஃபிக்ஸிங் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றனவா? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில், பிசிசிஐ அமைப்பின் ஊழல் எதிர்ப்பு பிரிவு இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் சிலரின் மோசடிகள் குறித்து சில ஆதாரங்கள் கிடைத்திருந்தாலும், அவர்களை முற்றிலும் வளைக்க அவை போதுமானவை அல்ல என்று கூறப்படுகிறது.

அதேசமயம், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், எல்.சிவராமகிருஷ்ணன் முதலியோரை உள்ளடக்கிய கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் நிர்வாக கவுன்சில் தலைவரான பி.எஸ்.ராமன், பிரீமியர் லீக் போட்டிகள் எந்தவித சிறிய முறைகேடுகளும் இல்லாமல் நடைபெற்றன என்று தெரிவித்துள்ளார்.