வாக்காளர் பட்டியல் திருத்தம்: காங்கிரஸ் கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை:

மிழகத்தில் வாக்களார் பட்டியல் சரிபார்த்தல், திருத்தம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப் பட்டு வரும் நிலையில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

வாக்காளர் பட்டியலை சரிபார்க்க இந்த ஆண்டு புதிய நடைமுறையை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். செப்டம்பர் 1ம் தேதி தொடங்கிய இப்பணி வரும் 30ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

மாவட்டத் தலைவர்கள் நமது கட்சியைச் சார்ந்த வாக்குச்சாவடி முகவர்களைக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள், நீக்கங்கள் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

தங்கள் பகுதி வாக்குச்சாவடிகளில் விடுபட்ட வாக்காளர்களின் பெயர்கள், திருத்தங்களை அதற்கான விண்ணப்பப் படிவங்களில் பூர்த்தி செய்து அவர்களின் கையொப்பம் பெற்று வாக்குச் சாவடி அலுவலரிடம் வாக்காளரின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகிய வற்றில் ஏதாவது ஒரு ஆவண நகல்களுடன் சேர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் ருத்தங்கள், பெயர் சேர்ப்பு பணிகள் சரியாக உள்ளனவா என்பதை கவனத்துடன் உறுதி வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.