தங்கமங்கை கோமதிக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கினார் தமிழக காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி

சென்னை:

ங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஏற்கனவே அறிவித்தபடி ரூ.5 லட்சத்திற்கான காசோலையை இன்று கோமதியிடம் வழங்கினார்.

சென்னை காங்கிரஸ் தலைமை அலுவலகம் சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோமதிக்கு பரிசுத்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. அப்போது தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராமசாமி, மூத்த தலைவர்கள் குமரிஅனந்தன், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு  உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதையடுத்து செய்தியார்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, பிரதமர் மோடி வெளிப்படையாக குதிரைப் பேரம் பேசுவது வருத்தமாக உள்ளது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று  குற்றம் சாட்டினார்.

மேற்குவங்கத்தில் பேசிய பிரதமர் மோடி,  மம்தா பானர்ஜி கட்சியில் உள்ள எம்எல்ஏ க்கள் என்னுடைய தொடர்பில் உள்ளனர் என  கூறியிருக்கிறார் , பிரதமரே வெளிப்படையாக குதிரைப் பேரம் பேசுவது வருத்தமாக உள்ளது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

பிரதமர் மோடி ஒரு பொதுக்கூட்டத்திற்கு 10 கோடி ரூபாய் செலவு செய்கிறார். தேர்தல் பிரசாரத்தின் போது மோடியின் வாகனத்திற்கு பின்னால் 2000 வாகனங்கள் செல்கிறது. ஆனால், தேர்தல் பிரசாரத்தின் போது 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. இதை எல்லாம் பார்த்தால் தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது என்ற கேள்வி எழும்புகிறது.

தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு விவகாரத்தில் பொன்மாணிக்கவேலுக்கு உதவவில்லை என மீண்டும் நீதிமன்றம் சாடியுள்ளது. ஆளும்கட்சியினருக்கு சிலைகடத்தலில் தொடர்பு இருப்ப தாலேயே அரசு இவ்வாறு மெத்தனமாக என்று தமிழக அரசை சாடிய அழகிரி,  அ.தி.மு.க. அரசு மேலும் 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவது  ஆட்சியை காப்பாற்றுவதற்காகவே என்றும் குற்றம் சாட்டினார்.

தமிழக அரசு  விவசாயிகளுக்கு நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்களை போதுமான அளவிற்கு திறக்கவில்லை என்று குற்றம் சாட்டியவர், வழக்கமாக  25 டன் நெல் கொள்முதல் செய்வது வழக்கம் ஆனால் தற்போது 15 லட்சம் டன் நெல் கொள்முதல் மட்டுமே செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், தண்ணீர் பஞ்சம் எப்படி வருமோ அதே போல அரிசி பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு ஆளுங்கட்சி தான் காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி