சென்னை,

டிகர் திலகம் சிவாஜி கணேசனின் 16ம் ஆண்டு நினைவுநாளை யொட்டி, கடற்கரை சாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில், ஐ.ஜி அலுவலகம் எதிலே உள்ள சிவாஜி சிலைக்கு, சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார், நடிகர் விக்ரம்பிரபு உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பல்வேறு அரசியல் கட்சியினர், சிவாஜி நலப் பேரவையினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியா செலுத்தினர்.

தமிழக காங்கிரஸ் தலைவர்  திருநாவுக்கரசர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்து  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் திரளான காங்கிரஸ் தொண்டர்களும் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்,  நடிகர் கமல்ஹாசன் சுட்டிக் காட்டியது போன்று, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை ஒழிக்கும் பணியில் அமைச்சர்கள் ஈடுபட வேண்டும் என்றும், தமிழக அரசு  தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளும் என்றும் கூறினார்.

முன்னதாக நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று (21.7.2017)   அவரது உருவபடம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதற்கு  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.