நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம்: தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி

சென்னை: நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறி இருக்கிறார்.

சென்னை சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களை அவர் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது கேஎஸ் அழகிரி கூறியதாவது: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தால் என்ன பலன் என தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

இல்லையெனில் பல்வேறு அறிவிப்புகளை போல் இதுவும் ஒரு அறிவிப்பாகவே இருந்துவிடும். 7 தமிழர்களை நீதிமன்றம் தான் மன்னிக்க வேண்டும். மன்னிப்பு பற்றி பேசுபவர்கள் வீட்டில் கொலை நடந்தால் ஏற்றுக்கொள்வார்களா?

ரஜினிக்கு சலுகை வழங்கியதை போல், விஜய்க்கு 24 மணி நேர அவகாசம் கூட வருமான வரித்துறை வழங்காது ஏன்? வருமானவரித்துறை ரஜினிக்கு  ஒரு அணுகு முறை,  விஜய்க்கு ஒரு அணுகுமுறை என கடைபிடிக்கிறது.

நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம், ஆனால் கட்சியில் சேர அழைப்பு விடுக்கும் அதிகாரம் மேல் இடத்திற்கு தான் உள்ளது என்று கூறினார்.

கார்ட்டூன் கேலரி