சென்னை :

புதிய வேலை வாய்ப்பை நிறுத்தி வைத்திருக்கும் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் சார்பாக நேற்று ஆர்பாட்டம் நடந்தது.

மின் வாரிய ஊழியர்களுக்கு பதவி உயர்வு, போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நறைவேற்றக்கோரி நடந்த போராட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

 

மேட்டூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் திரண்டு ஆர்பாட்டம் செய்த மின் வாரிய ஊழியர்களின் ஒரு பிரிவினர், மின் வாரிய தலைவரின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்ததோடு, ஒப்பந்த ஊழியர்கள், பகுதி நேர ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் போனஸ் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மின்வாரிய தலைவரின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், “மின் வாரியத்தில் மக்கள் சேவை தொடர, துணை மின் நிலையங்களை பராமரிக்கும் பணியை தனியாரிடம் தாரைவார்க்காதே” என்று கோஷம் எழுப்பினர்.

சட்டசபையில் அறிவித்த உதவிப் பொறியாளர் நேரடி நியமனத்தை நிறைவேற்றகோரியும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பகோரியும், தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியப் பொறியாளர் கழகம் சார்பில் இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.