சென்னை:

தமிழ்நாடு 3வது பிரிமீயர் ‘லீக்‘ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூலை 11-ம் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டிபேட்ரியாட்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், சீசெம் மதுரை பேந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், விபி காஞ்சி வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐடீரீம் காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

இதற்கான வீரர்கள் தேர்வு சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இன்று நடந்தது.இதில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி எஸ்.கார்த்திக், ஆர்.அலெக்சாண்டர், சசிதேவ் ஆகிய வீரர்களை தக்க வைத்துக் கொண்டது.
சுப்ரமணியன் ஆனந்த், ஆகாஷ் சும்ரா, கணேஷ் மூர்த்தி ஆகியோரை டூட்டி பேட்ரியாட்ஸ் அணியும், ரோகித், பிரதோஷ் ரஞ்சன் பால், அஜித் ராம் ஆகியோரை கோவை அணியும் தக்க வைத்துக்கொண்டது.

அருண்கார்த்திக், ஷிஜித் சந்திரன், கார்த்திகேயன் ஆகியோரை மதுரை அணியும், இந்திரஜித், பரத் சங்கர், விக்னேஷ் ஆகியோரை திருச்சி வாரியர்ஸ் அணியும், அபராஜித், சிலம்பரசன், சஞ்சய்யாதவ் ஆகியோரை காஞ்சி வீரன்ஸ் அணியும், ஆர்.அஸ்வின், ஜெகதீசன், விவேக் ஆகியோரை திண்டுக்கல் அணியும், ஷாஜகான், ராஜ்குமார், மோகன் பிரசாத் ஆகியோரை காரைக்குடி அணியும் தக்க வைத்துக் கொண்டன.

வாஷிங்டன் சுந்தரை டூட்டி பேட்ரியாட்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சர்வதேச வீரரான விஜய் சங்கரையும், அந்தோணிதாசை கோவை அணியும், சி.வி. வருணை மதுரை அணியும், எம்.எஸ். சஞ்சய்யை திருச்சி வாரியர்ஸ் அணியும், லோகேஸ்வரை காஞ்சி அணியும், சதுர்வேதியை திண்டுக்கல் அணியும் தேர்வு செய்தன.
தினேஷ் கார்த்திக்கை காரைக்குடி காளை அணியும் தேர்வு செய்தன.

2-வது சுற்று
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோபிநாத்தையும், டூட்டி பேட்ரியாட்ஸ் கவுசிக் காந்தியையும்,
டி.நடராஜனை கோவை அணியும், அபிஷேக் தன்வாரை மதுரை அணியும், சோனு யாதவை திருச்சி வாரியர்ஸ் அணியும், விஷால் வைத்யாவை காஞ்சி வீரன்ஸ் அணியும், ஹரி நிஷாந்த்தை திண்டுக்கல் அணியும், அணிருதாவை காரைக்குடி அணியும் தேர்வு செய்தன.

3, 4, 5வது சுற்று

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முருகன் அஸ்வின், ஹரீஷ் குமாரையும், கங்கா ஸ்ரீதர் ராஜூவையும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தேர்வு செய்தது.

டூட்டி பேட்ரியாட்ஸ் அணி சாய் கிஷோர், ஆர்.சதீசையும், அதிசயராஜ் டேவிட்சனையும் தேர்வு செய்தது.

கோவை அணி அபினவ் முகுந்தையும் விக்னேஷ், ஷாருக்கான் ஆகியோரை தேர்வு செய்தது.

மதுரை அணி ரகீல்ஷா, சற்குணம், கவுசிக் ஆகியோரை தேர்வு செய்தது.

திருச்சி வாரியர்ஸ் அணி முரளி விஜய், கணபதி, சுரேஷ்குமார் ஆகியோரை தேர்வு செய்தது.

காஞ்சி வீரன்ஸ் அணி ஹவுசிக் சீனிவாஸ், சுப்பிரமணிய சிவா, முகிலேஷ் ஆகியோரை தேர்வு செய்தது.

திண்டுக்கல் அணி அணிருதா சீதாராம், முகமது, ரோகித் ஆகியோரை தேர்வு செய்தது.

காரைக்குடி காளை அணி மகேஷ், கவின், சூர்யபிரகாஷ் ஆகியோரை தேர்வு செய்தது.