குரூப்-1 தேர்வு: திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை அறிமுகம் செய்தது டிஎன்பிஎஸ்சி

சென்னை:

டிஎன்பிஎஸ்சி குரூப் ஒன் தேர்வுக்கான திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே தேர்வு நடைபெறும் என்று   தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் 1 (Group 1) பணிகளுக்கான குறுகிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 20.01.2020 முதல் 19.02.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்வானது 05.04.2020 அன்று நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்த தேர்வுகளுக்குரிய பாடத்திட்டங்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். தேர்வர்கள் அதனை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என் டிஎன்பிஎஸ்  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளது.

இந்த புதிய பாடத்திட்டத்தில் வரலாறு உள்ளிட்ட சில பாடங்களில் பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டு தமிழுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியம் சார்ந்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் மாற்றி வடிவமைக்கப்பட்ட குரூப் 2 பாடத்திட்டத்துடன், இந்த புதிய பாடத்திட்டம் நூறு சதவீதம் ஒத்துப்போவதால், குரூப் 2 தேர்வுக்கு தயார் செய்பவர்கள், குரூப் ஒன் தேர்வுக்கான முதல்நிலை தேர்வையும் எளிமையாக அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் டிஎன்பிஎஸ்சி குரூப் ஒன் முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் ஏதும் செய்யப்பட வில்லை என்றும், பழைய பாடத்திட்டமே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.