டிஎன்பிஎஸ்சி குரூப் -2 தேர்வு முடிவுகள் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1199 பணியிடங்களை நிரப்புவதற்காக நவம்பர் 11ஆம் தேதி இத்தேர்வு நடைபெற்றது.

group2

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1199 பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வை கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்கள் தமிழகம் முழுவதும் சார்பதிவாளர், வருவாய்த்துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட பல பணியிடங்களுக்கு நிரப்பட உள்ளனர்.

தேர்வு முடிந்து ஒருமாதம் கடந்த நிலையில் இன்று அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று பார்த்துக் கொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் தேர்வு நடத்தப்பட்டு ஒரு மாதத்திலேயே முடிவு வெளியிடப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

You may have missed