டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு  முடிவுகள்

சென்னை:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சியின் இணையதளத்தில் இந்த முடிவுகளைக் காணலாம்.

தேர்வாணையத்தின் இணையதளம்: www.tnpsc.gov.in.

இதுகுறித்து தேர்வாணைய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சோபனா வெளியிட்டுள்ள அறிக்கை:

 

 

09-1465441938-tnpsc-01-600

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், குரூப் 2 தேர்வுகள் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி நடைபெற்றது.  இந்தத் தேர்வினை 6.54 லட்சம் பேர் எழுதினர். அவர்களில், 6.48 லட்சம் பேரின் மதிப்பெண், தரவரிசை நிலை ஆகிய விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை நிலை, வகுப்பு வாரியான தரவரிசை நிலை, சிறப்புப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலையும் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்- தரவரிசை நிலை ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள, பதிவு எண்ணை இணையதளத்தில் அச்சிட்டு அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித் தகுதி, தொழில்நுட்பக்கல்வி தகுதி, இனம், சிறப்புப் பிரிவு நிலை ஆகியவற்றின் அடிப் படையில் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரிய வந்தால், அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக் கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் ஜூலை 4 ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். அவர்களின் தரவரிசை நிலை, காலியிட நிலை, இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப் படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.

கலந்தாய்வுக்கு அழைக்கப் படுவோரின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்”  என்று சோபனா தெரிவித்துள்ளார்.