சென்னை:
மிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் தமிழ்நாடு அரசு தேர்வாணையம்  மூலம் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பபடுகிறது. இதற்காக குருப் தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி  நடத்தி வருகிறது.
இந்த வருடம் நடைபெற இருக்கும குருப்-4க்கான காலி பணியிடங்கள் மற்றும் தேர்வு விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
tnpsc
தமிழக அரசின் இளைநிலை உதவியாளர் பணிக்கான 5451 காலிபணியிடங்களை கொண்ட குருப்4 தேர்விற்கான அறிவிப்பு  வெளியிடப்பட்டு உள்ளது.
தேர்வு நாள்  :  நவம்பர் 6 2016
விண்ணப்பிக்க கடைசி நாள் :  செப்டம்பர் 8 2016
விண்ணபிக்கும் இணையம் :   www.tnpsc.gov.in
கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை
சம்பளம் :  15000-20200
பாடத்திட்டம் : மொத்தம் 200 கேள்வி (தமிழ் (அ)ஆங்கிலம்100, கணிதம் 25 பொது அறிவு 75) அனைத்து கேள்விகளும் 6 வகுப்பிலிருந்து 10 வகுப்புவரை உள்ள பள்ளி புத்தகத் தரத்திலே அமையும் கூடுதலாக நடப்பு நிகழ்வுகள் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
பாடத்திட்டம் பற்றிய குறிப்பேடு டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் பார்க்கலாம்.
http://www.tnpscportal.in/2013/07/download-tnpsc-group-4-syllabus-tamil-pdf.html
அரசு அதிகாரி ஆக வேண்டும் என நினைத்தால் இன்று முதல் மூன்று மாதம் கடுமையான முயற்சி செய்தால் அரசு அதிகாரி ஆவது உறுதி
கடுமையான போட்டி நிலவும் , 5451 காலி பணியிடங்களுக்கான குருப்4 தேர்வுக்கு குறைந்தது 8 லட்சம் தேர்வு எழுத காத்திருக்கிறார்கள்.
தனியார் துறையில் சிக்கி கனவை இழந்து படித்து முடித்து வேலை இல்லாமல் வாழ்வை இழந்து பரிதவிக்கும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது நல்லது.