டிஎன்பிஎஸ்சி குரூப்–4 தேர்வு முடிவுகள் வெளியீடு: இணையதளத்தில் பார்க்கலாம்

--

சென்னை:

மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி  குரூப்–4 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளை இணைய தளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த பிப்ரவரி  மாதம் 11ம் தேதி குரூப் 4 தோ்வு நடைபெற்றது. இந்த தேர்வை  தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் தேர்வு எழுதினர்.

தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் ரேங்க் ஆகியவற்றை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் வெளியிட்டது.

இந்த ரேங்க் பட்டியலில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற திருநாவுக்கரசு 14-வது இடத்திலும், செல்வக்குமார் 33-வது இடத்திலும் கிருத்திகா 144-வது இடத்திலும் உள்ளனர்.

இந்நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.