சென்னை:

மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப்-1 தேர்வுக்கு இன்றுமுதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு காவல்துறையில், துணை காவல்துறை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கு இன்று ( ஜனவரி 20 ந் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என  டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 1 பணியில் அடங்கிய காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வரும் 2 ந் தேதி வெளியிடுகிறது.

தேர்வர்கள் ஜனவரி 20 ந் தேதி முதல் பிப்ரவரி 19 ந் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு ஏப்ரல் மாதம் 5 ந் தேதி நடத்தப்படும்.

குருப் 1 தேர்விற்கான தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீட்டு விவரங்கள், தேர்வு முறைகள் உள்ளிட்ட விவரங்கள் வரும் 20 ந் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in, www.tnpsc.exam.net , www.tnpsc.exam.in ஆகிய இணையதள பக்கங்களில் தெரிந்துகொள்ளலாம்.

தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள்  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 32 ஆண்டுகள் ஆகும். விரிவான வயது வரம்புக்கு குறித்த தகவலை இணையதளத்தில் பார்க்க வும் அறிவுறுத்தி உள்ளது.

இந்த ஆண்டிற்குள்ளாகவே குருப் 1 தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு டி.என்.பி.எஸ்,சி திட்டமிட்டுள்ளது.

மேலும் குருப் 1 தேர்வில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தாண்டு முதல் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.