டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது!

--

சென்னை:

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. பயனர்கள் தங்களது தேர்வு எண்களைக் கொண்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் குரூப் 1 பிரிவுக்க்கான தேர்வு கடந்த அண்டு நடைபெற்றது. 181 காலிய இடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்து கடந்தஆண்டு (2019) ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டு, மார்ச் மாதம் முதல்நிலை தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வை  2.29 லட்சம் போ் எழுதினா். அவா்களில் 9 ஆயிரத்து 442 போ் முதன்மைத் தோ்வினை எழுதினா். இந்த தேர்வு முடிவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் (2019)  9-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (நேற்று) செவ்வாயன்று குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதன்முறையாக நேர்முகத்தேர்வு முடிவடைந்த ஆண்டே தேர்வு பெற்றவர்கள் விபரம், மதிப்பெண் விபரங்கள் மற்றும் தர வரிசை பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல குரூப் 1 தேர்வுக்கான இறுதி முடிவுகள் முதன்முறையாக தேர்வுகள் துவங்கிய ஓராண்டிற்குள் வெளியிடப்பட்டுள்ளது.

குரூப்- 1 பணியிடங்களுக்கான நேர்காணல் இன்று முடிவடைந்த நிலையில்,  முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/new_index.html என்ற இணையதள முகவரியை அணுகலாம்.