மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை: சபரிமலைக்கு இன்றுமுதல் 64 சொகுசு பேருந்துகள் இயக்கம்!

சென்னை:

ய்யப்பனுக்கு உகந்த மாதமான கார்த்திகை மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை (17-ந்தேதி) தொடங்கும் நிலையில், தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகம் அய்யப்பன் பக்தர்களுக்காக இன்றுமுதல் சொகுசு பேருந்துகளை இயக்குகிறது.

அதன்படி, இன்றுமுதல் 64 சொகுசு பேருந்துகள் சபரிமலைக்கு இயக்கபபடுவதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சபரிமலை ஐய்யப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை 1ஆம் தேதியான நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 60 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதையொட்டி, சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், பக்தர்களின் வசதிக்காக தமிழ அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சொகுசு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது.

இதுகுறித்து  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு விழாக்களின் போது, தமிழக பக்தர்கள் சென்று வர வசதியாக தமிழகத் தின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு விரைவு போக்கு வரத்துக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல, இந்த ஆண்டும் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து நவம்பர் 15-ம் தேதி (இன்று) முதல் ஜனவரி 20-ம் தேதி வரை சிறப்பு சொகுசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையில் இருந்து 55, திருச்சி, மதுரை, புதுச்சேரியில் இருந்து தலா 2 பேருந்துகள், தென்காசியில் இருந்து 3 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பக்தர் கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒவ்வொரு நாளும் பேருந்து கள் இயக்கப்படும்.

இந்த சிறப்பு பேருந்து களுக்கு www.tnstc.in, ww.red bus.in., www.busindia.com, www.makemytrip.com உள் ளிட்ட இணையதளங்கள் மூலம் 60 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் தகவல்களுக்கு 9445014412, 9445014416, 9445014450 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.