வேலை நிறுத்த எதிரொலி : கட்டணமில்லா தனியார் பேருந்து!

சென்னை

கோயம்பேட்டில் இருந்து தனியார் பேருந்து கட்டணம் வசூலிக்கப் படாமல் பொதுமக்களுக்காக இயங்கி வருகிறது.

நேற்று மாலை முதல் திடீர் என போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.    இன்றும் தொடரும் வேலை நிறுத்தத்தை ஒட்டி அரசு மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.   தற்காலிகமாக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல்,  தனியார் பேருந்துகளை இயக்குதல் போன்றவைகளை அரசு செய்து வருகிறது.

அதையொட்டி சென்னை அண்ணா நகரில் உள்ள P R R டிராவல்ஸ் என்னும் நிறுவனத்திடம் போக்குவரத்துக் கழகம் 100 பேருந்துகளை இயக்குமாறு கேட்டுக் கொண்டது.   அதற்கான கட்டணத்தை அரசிடம் இருந்து வாங்கித் தர கழகம் ஒப்புக் கொண்டது.    ஆனால் அந்த நிறுவனம் தாங்கள் வழக்கமாக ஐ டி நிறுவனங்களுக்கு பேருந்து அனுப்பும் ஒப்பந்தத்தில் உள்ளதால் 20 பேருங்களை இயக்க ஒப்புக் கொண்டது.

அதன் படி இந்த பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து பல வழித்தடஙகளில் இயக்கப்படுகின்றன.    போக்குவரத்துக் கழகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க பயணிகளிடம் இந்த பேருந்துகளில் கட்டணம் வசூலிப்பது இல்லை.   பொதுமக்கள் இலவசமாக இந்த பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.    இந்த பேருந்துகளுக்கான செலவை அரசே ஏற்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

You may have missed