சென்னை:

10 ரூபாய் நாணயங்கள் வாங்குவதை தவிர்க்கவும் என பஸ் கண்டர்களுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 10 ரூபாய் நாணயங்களை சி ல வணிகர்கள் வாங்க மறுத்து வரும் நிலையில், அரசு பஸ் கண்டர்களும்  வாங்க வேண்டாம்  அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசு டவுன் பஸ்களில் 10 ரூபாய் நாணயங்களை பயணிகள் கொடுத்தால், அது செல்லாது என்று கண்டக்டர்கள் வாங்க மறுத்து வகிகின்றனர்.  இதனால் பயணிகளுக்கும், கண்டக்டர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. சிலசமயம் வாக்குவாதம் முற்றி தகராறு வரை போய் விடுகிறது.

இந்த நிலையில்  10 ரூபாய் நாணயங்கள் வாங்க வேண்டாம் என கண்டர்களுக்கு  போக்குவரத்து பணிமனை சுற்றறிக்கையால் அனுப்பி உள்ளதாலும் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  ஏற்கனவே
10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா? செல்லாதா? என மக்கள் மத்தியில் ஏற்கனவே சந்தேகங்கள் இருந்து வருகிறது.

சில வணிகர்கள் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில் தயக்கம் காட்டுகின்றனர். சிலர் வாங்க மறுத்தும் வருகின்றனர். இந்த நிலையில் பயணிகளிடம் 10 ரூபாய் நாணயங்கள் வாங்குவதை நடத்துனர்கள் தவிர்க்க வேண்டும் என கோவை சரகத்தில் சுற்றறிக்கை  ஒட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இது பொதுமக்களிடையே பரபரப்பையும், பீதியையும்  ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சுற்றறிக்கையை வாபஸ் பெற்றுள்ள பணிமனை நிர்வாகம், 10ரூபாய் நாயணங்கள் ஏராளமாக குவிந்து வருவதால், அதை வங்கியில் டெபாசிட் செய்யும் போது பல இடையூறுகள் ஏற்படுகிறது. அதன் காரணமாகவே நாணயங்கள் வாங்குவதை குறைக்கும் வகையில் அறிவுறுத்தப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.

சிறுதொழில்கள், கூலிவேலைகள் செய்யும் தொழிலாளர்களுக்கு பல நிறுவனங்கள்  சம்பளமாக 10 ரூபாய் நாணயங்களாகவே வழங்கி வருகிறது.10ரூபாய் நாணங்கள் குறித்து வங்கி தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.