டில்லி

ந்திய ரெயில்வே கூட்ட நெரிசலை தவிர்க்க கிறிஸ்துமஸ் வரை 2500 கூடுதல் ரெயில் சேவைகளை அளிக்க உள்ளது.

நடந்து முடிந்த தசரா கொண்டாட்டங்களுக்குப் பிறகு தொடர்ந்து பண்டிகைகள் வருகின்றன.  எனவே ரெயில்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  இந்த கூட்ட நெரிசல் வரும் கிறிஸ்துமஸ் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த கூட்டலை நெரிசலை தவிர்க்க இந்திய ரெயில்வே பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக 200 ரெயில்வே தடங்களில் மொத்தம் 2500 ரெயில் சேவைகள் கிறிஸ்துமஸ் வரை அளிக்கப்படும் என இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.   இந்த சேவை முக்கியமாக டில்லி – பாட்னா, டில்லி – கொல்கத்தா, டில்லி – மும்பை, மும்பை – லக்னோ, சண்டிகர் – கோரக்பூர், டில்லி- சப்பரா, ஹவுரா – கதிகார், அரித்வார் – ஜபல்பூர்  உள்ளிட்ட தடங்களில் இயக்கப்பட உள்ளன.

முக்கியமான ரெயில் நிலையங்களில் பதிவு செய்யப்படாத பயணிகளின் பெட்டிகளில் ஏறுவோருக்கு வரிசையில் ஏற ரெயில்வே பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.   பயணிகளின் பாதுகாப்புக்காக காவல்படையினர் அனைத்து ரெயில் நிலையங்களிலும் அதிகப்படுத்தப்பட்டுள்ளனர்.   அனைத்து ரெயில் நிலையங்களிலும் ரெயில்கள் வருகை, புறப்பாடு, சிறப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு குறித்த அறிவிப்புக்கள் அளிக்கப்பட உள்ளன.