நாமக்கல் ஆஞ்சநேயர் ஜெயந்தி – 1,,00,008 வடைமாலை சாற்றல்

நாமக்கல்

நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயருக்கு இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 1,00,008 வடைகளால் ஆன மாலை சாற்றப்பட்டுள்ளது.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற கோவில் ஆகும்,  மார்கழி அமாவாசை அன்றுதான் அனுமன் அவதரித்தார்.  இதையொட்டி நாமக்கல்லில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன

இன்று மார்கழி அமாவாசை ஆகும்.  ஆகவே அனுமன் ஜெயந்தி விழாவான இன்று நாமக்கல்  18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு  அதிகாலை 5 மணிக்கு 1,00,008 வடை மாலை சாத்தப்பட்டது.

இதையொட்டி  பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று  பிற்பகல் 1 மணிக்குத் தங்கக் கவச அலங்காரத்தில் ஆஞ்சநேய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.