தமிழக அரசின் புதுமை விளம்பர வாசகங்கள்

சென்னை

கொரோனா விழிப்புணர்வுக்காகத் தமிழக அரசு புதிய விளம்பரம் வெளியிட்டுள்ளது.

பல நேரங்களில் ஒரு விளம்பரம் பலரைச் சென்றடைய அதன் வாசகங்களுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது

 இது அரசின் விளம்பரங்களுக்கும் பொருந்தும்.

ஊரடங்குக்குப் பிறகு தமிழகத்தில் பல அலுவலகங்கள் இயங்கத் தொடங்கி உள்ளன

இதையொட்டி கொரோனா விழிப்புணர்வுக்காகச் சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ள விளம்பர வாசகங்கள் பலரைக் கவர்ந்துள்ளது.

அதன் தமிழாக்கம் வருமாறு

தமிழக அரசு வாஷ் பேசின்கள், நீர் குழாய்கள், நீர் சோப்பு, மற்றும் சோப்பு போன்றவற்றை அரசு மற்றும் மதத் தலங்கள் உள்ளிட்ட தனியார் இடங்களில் அவசியம் வைக்க வேண்டும் என்பதைக் கட்டாயம் ஆக்கி உள்ளது.

எனவே அனைத்து மக்களும் உள்ளே நுழையும் முன்னரும் வெளியே செல்லும் முன்னரும் அவசியம் சோப மற்றும் நீர் கொண்டு கைகளைக் கழுவ வேண்டும்

– பொதுச் சுகாதாரம் மற்றும் தற்காப்பு மருத்துவத் துறை