நெட்டிசன்:

 பி. கதிர்வேலு (P Kathir Velu) அவர்களின் முகநூல் பதிவு:

கோடையைச் சமாளிக்க… தண்ணீரைச் சேமிக்க மற்றும் முறையாகப் பயன்படுத்த ”ஈரோடு வாசல்” வாட்சப் குழும உறுப்பினர்கள் தரும் சில எளிய குறிப்புகள்:

Shanmugavadivu
1. ஒரு போதும் ஷவர் உபயோகிப்பதில்லை. (வேறு வசதியில்லை என்ற பொழுதுகள் தவிர)

2. அரை அரைக் கோப்பையாய் எடுத்துக் குளிக்கையில், தண்ணீர் அதிகம் செலவாவதில்லை.

3. சமையலறையில் பாத்திரம் கழுவ, நேரடியாய்க் குழாயைத் திறப்பதில்லை. ஒரு பக்கெட்டில் பிடித்து வைத்துத்தான் கழுவுகிறோம்.

4. அரிசி கழுவிய, காய்கறிகள் அலசிய தண்ணீர் செடிகளுக்கு ஊற்றப் படும்.

5. எங்கு சென்றாலும் கையில் தண்ணீர் பாட்டில் இருக்கும். தவிர்க்கவே முடியாத சந்தர்ப்பங்கள் தவிர்த்து தண்ணீர் பாட்டில்கள் வாங்குவதில்லை.

6. விசேஷ வீடுகளில் வைக்கப்படும் தண்ணீர் பாட்டில்களைத் தவிர்க்க முடியாத பொழுது, அதைக் கையில் எடுத்து வந்து விடுவது வழக்கம். (அடுத்தவரின் கேலிப் பார்வையைப் பொருட்படுத்துவதில்லை)

7. கையால் துவைக்க முடியும் துணிகளை மெஷினில் போடுவதில்லை.

பாலைவனப் பூமி மஸ்கட்டில் கழிவு நீரை வண்டிகளில் எடுத்துப் போய்ச் சுத்திகரித்து, சொட்டு நீர்ப் பாசன முறையில் மரங்களுக்குப் பாய்ச்சி… அத்தனை அழகாய்ப் பராமரிக்கிறார்கள்.

Neelakantan:
சிக்கனத்துக்கு ஷவரை பரிந்துரைக்கிறேன்.

குளிக்க, துவைக்க, துலக்க, துடைக்க என எல்லாவற்றுக்கும் bio degradable, eco friendly பொருட்களையே உபயோகிப்பதால், அந்த நீர் முழுவதையும் செடிகளுக்கே உபயோகிக்கிறோம்

Rathi Rajesh:
செடி கொடிகளுக்கிடையில் ….காய்ந்த இலைகளை கூட்டுவதில்லை…..இது ஈரத்தை தக்க வைக்கும்.

குறைந்த நேரமே உடுத்திய உடைகளை… உடனே அழுக்கில் வீசாமல், எடுத்து சுடு வெய்யலில் உளர்த்தி எடுத்து மடித்து வைத்து கொள்ளலாம்.

எங்கள் வீட்டில் ஒரு நீர்பிடித்து வை

க்கும் பேரல் உள்ளது , கிட்டதட்ட 500 லி கொள்ளளவு. ஜன்னல் சன் சைட் போன்ற ஒரு அமைப்பும் உண்டு.
மழை வரும் போல் இருந்தால் அந்த சன்சைட்யை சுத்தம் செய்து கொள்ளுவேன். அதில் இருந்து தேங்கி வரும் நீரை முதல் 15 நிமிடம் விட்டுவிட்டு…..பின் பேரலில் நிரப்பி கொள்வேன். மழை நின்ற பின் தண்ணீர் தெளியவிட்டு குடம் கொண்டு வேறு எவர்சில்வர் ட்ரம்களில் சேமித்து வைத்து கொள்வேன். ” சுத்தமான குடிநீர்!!!”

இது போல அமிர்தமான நீரை இனி அருந்த இயலாது என்ற மனநிறைவுடன் பயன்படுத்த ஆரம்பிப்பேன்…….போன முறை வந்த மழைநீர் இன்னும் மிச்சம் உள்ளது.

Muththarasu :
1. விவசாயம்: குறைந்த நீரில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அதிக மகசூல் பெற இஸ்ரேல் நாட்டு முறையை பின்பற்றலாம்.

2. வீடு, தாங்கும் விடுதி மற்றும் சிறிய பெரிய அலுவலகங்கள் : நீரை மறுசுழற்சிக்கு உட்படுத்தலாம்.

Sangamithrai:
தினமும் சமையலறையில் ஒரு சுத்தமான தனியான ஈய பக்கெட் வைத்து அதில் அரிசி 3 தடவை கழிவும் நீர்… மாவுக்கு அரைக்கும் போது உளுந்து கழிவும் நீர்… சமையலுக்கு காய்கறி கழிவும் நீர் என்று 2 முழு பக்கெட்கள் நிரம்பும்.

அவற்றை சலிக்காமல் தொட்டியில் வைத்திருக்கும் செடிகளுக்கு டானிக் குடிங்கடா என்று சொல்லுவேன்… ரோட்டில் வைத்திருக்கும் மரத்திற்கும் ஊற்றுவேன்… நிறைய தண்ணீர் இருந்தால் எதிர் வீடு பக்கத்து வீடுகளில் ரோட்டில் வைத்திருக்கும் மரங்களுக்கும் ஊற்றுவேன்…

இதை கவனித்த அவர்களும் அரிசி உளுந்து காய்கறி கழுவும் நீரை(சத்து நீரை) கொண்டு வந்து தங்கள் செடிகளுக்கு ஊற்றுகிறார்கள்…

Sasi Dharani:
RO waste தண்ணீரை பிடித்து செடி கொடிகளுக்கு பயன்படுத்துகிறேன்

Manju:
ஆண்கள் தயவுசெய்து ஷேவ் செய்யும் போது வாஷ்பேசின் பைப் திறந்துவிட்டு செய்யாதீர்கள்.. மக்கில் நீர் பிடித்து உபயோகிக்கவும்..

முடிந்தவரை indian closet பயன்படுத்துங்கள்.. நீரும் சேமிக்கலாம்..உடலுக்கும் நல்லதே..

RO கழிவுநீரில் உப்புகள் மிகுந்திருப்பதால் அதை தாவரங்களுக்கு உபயோக படுத்த வேண்டாம்.. கருகி விடும் வாய்ப்பு அதிகம்.. துணி துவைத்தாலும் நுரைக்காது.. மாற்றாக, சேமித்து பாத்திரம் / பாத்ரூம் கழுவ, வீடு துடைக்க பயன்படுத்தலாம்..

வீட்டில் ஏதேனும் குழாய்கள் சரியாக நிறுத்த முடியாமல் பழுதடைந்திருந்தால் உடனே சரி செய்யலாம்.. சிறுதுளி பெருவெள்ளமல்லவா??

Thangadurai:
இப்போது இருக்கும் நிலையில் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தினாலே அது ஒரு சேமிப்பு முறை தான்.

Kesevan:
தேவையான தண்ணீர் இல்லாமல் சில வருடங்கள் முன்பு தென்னந்தோப்பு காய்ந்த நிலையில் முழுக்க சொட்டு நீர் பாசனத்துக்கு மாற்றினேன். இப்போ அதுக்கும் தண்ணீர் போதாததால் மேடான பகுதியில் இருந்து கிணற்றிற்கு மழை நீர் வரும் வகையில் சின்ன கசிவு நீர் குட்டை ஒன்றை நீள் வடிவில் ஏற்படுத்தியுள்ளேன்.

Ganapathi:
Western toiletries பயன்படுத்துபவர்களாக இருந்தால் அதன் Flush float லெவலை குறைப்பதன் மூலம் நிறைய தண்ணீர் சேமிக்கலாம் .

Jayabalan:
சமையல் பாத்திரம் மற்றும் சாப்பாட்டு தட்டுகளை வேலை முடிந்தவுடன் அலம்பி விடுங்கள். காய்ந்தால் கூடுதல் நீர் தேவைப்படும்! கழிவுநீர் வாய்க்காலை தோட்டங்களுக்கு திருப்பி விடுங்கள் !

Yasotha :
நான் வீடு துடைக்கும் தண்ணீரை செடிகளுக்கு ஊற்றுகிறேன்.  R. O தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு விடுகிறேன்.  அரிசி கழிவும் நீர், உளுந்து கழுவும் நீர், போன்றவைகளை வீணாக்காமல் செடிகளுக்கு விடுவதால் உரமாகவும் பயனாகிறது.

துணிகளை துவைத்து விட்டு வாளியில் தண்ணீர் பிடித்து வைத்துக் கொண்டு தான் அலசுவேன். அலசி முடிக்கும் வரை சிலர் குழாயை திறந்தே  இ௫ப்பார்கள். இதை தவிர்க்க வேண்டும்.

Erode Kathir:
* கை கழுவ, பல்துலக்கும் பிரஷ்சை கழுவ என அருவியாய் திறந்து விடுவதைத் தவிர்த்து மக்குகளில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தலாம்

* நீரில் முகத்தில் நனைத்து விட்டு, சோப்பு போட்டு தேய்த்து முடிக்கும் வரை குழாய் திறந்திருப்பதை நிறுத்தலாம்

* பாத்டப் இருந்தால், நீச்சல் குளம் இருந்தால் இந்த கோடை முடியும் வரை தவிர்க்கலாம்

* வீட்டுத்தோட்டத்தில் குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சாமல், பக்கெட்டுகளில் ஊற்றலாம்

காசு இருந்தா லாரில தண்ணி வாங்கிக்கலாம்னு நினைக்கிறோம். காசு இருந்தா லாரிக்கு டீசல் வாங்கலாம். காசு இருந்தாலும் தண்ணீர் வாங்க முடியாத வறட்சியை நோக்கித்தான் போறோம்

Gokul:
வாஷிங் மெஷின் பயன்படுத்தும் போது எப்பொழுதும் முழு லோடு போடவும்.

Raja Rajeswari:
செடி இருக்கறவங்க செடிய சுத்தி இலை தழைகளை போட்டு வைங்க.. செடிக்கு ஊத்தற தண்ணி அவ்ளோ சீக்கிரம் உலராது

Over head tank automatic water level controller போடாதவங்க செலவைப் பார்க்காம போட்டுடுங்க… டேங்க் நிரைஞ்சு கீழ வழியற தண்ணிய தடுக்கலாம்.

வாசலுக்கு தண்ணி போடறவங்க, செடிக்கு தண்ணி ஊத்தறவங்க ஹோஸ் பைப் போடாம பக்கெட்ட பயன்படுத்தலாம்

Toilet flush outல் பாதிப் பகுதியை ஸ்பான்ஜ் கொண்டு நிரப்புவதால் வெளிவரும் தண்ணீர் அளவு குறையும்.