டில்லி

நாட்டில் கொரோனாவை ஒழிக்க தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10  மாவட்டங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.  இதில் மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, டில்லி மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்கள் பாதிப்பில் முதல் 5 இடங்களில் உள்ளன.   நேற்று மாநில முதல்வர்களுடன் கொரோனா பாதிப்பு தொடர்பாக நடவடிக்கைகள் எடுப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனாவுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர்கள் விளக்கம் அளித்தனர்.

அதன் பிறகு பிரதமர் மோடி, ”கொரோனா பாதிப்பு அதிகமாகவும், பரிசோதனை எண்ணிக்கை குறைவாகவும் உள்ள மாநிலங்களில், குறிப்பாகப் பீகார், குஜராத், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கத்தில் கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். தற்போது 10 மாநிலங்களில் நாட்டின் 80 சதவீத கொரோனா பாதிப்பு உள்ளது.

அத்துடன் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், குஜராத், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம்  ஆகிய 10 மாநிலங்களில்தான் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஆகவே, நாம் இங்கு ஒன்றாக அமர்ந்து, மறு ஆய்வு செய்து, ஆலோசிக்க வேண்டி உள்ளது. நாம் இந்த 10 மாநிலங்களும் கொரானோவை வீழ்த் விட்டால், தொற்று நோய்க்கு எதிரான போரில் நாடே வெற்றி பெறும்.

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்த 10 மாநிலங்களும் முக்கிய பங்காற்றி வருகின்றன. இப்போது நாட்டின் தினசரி பரிசோதனை எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டி உள்ளது.  சோதனைகள் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும். உலகிலுள்ள மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் இறப்பு விகிதம் குறைந்துள்ளதும் தொடர்ந்து குறைந்து வருவதும் திருப்தி அளிக்கிறது.

அத்துடன் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து, குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், நமது முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது என்பதை அறியலாம்.   எல்லாவற்றையும் விட முக்கியமாக இந்த புள்ளிவிவரங்கள் மூலம் மக்கள் மத்தியில் நம்பிக்கை வந்துள்ளதால் நம்பிக்கை நம்பிக்கை அதிகரித்து நோய்த் தொற்றின் மீதான பயம் குறைந்துள்ளது.

நாம் இன்னும் அதிக பரிசோதனை செய்து கவனம் செலுத்தினால், பாதிப்பு எண்ணிக்கையையும்,  இறப்பு விகிதத்தையும் மேலும் குறைக்கலாம்.

கொரோனாவுக்கு எதிரான போரில் நமது முக்கிய ஆயுதங்களாகக் கட்டுப்படுத்துதல், தொடர்புகளை தடமறிதல், கண்காணித்தல் இவை மூன்றும் தான் உள்ளன. மக்கள் மத்தியில் இப்போது புரிதல் ஏற்பட்டுள்ளதால் அரசுக்கு ஒத்துழைக்கிறார்கள். இதுவுநமது விழிப்புணர்வூட்டும் முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றி ஆகும்.

தற்போது, நாம் சரியான பாதையில் பயணித்து வருகிறோம். ஒவ்வொரு மாநிலமும் அதன் திறனுக்கு ஏற்ப கொரோனாவை எதிர்த்துப் போராடி வருகின்றன.  இப்போது மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒரு அணியாக இருந்து இணைந்து செயல்பட்டால் நல்ல முடிவு எட்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை 72 மணி நேரத்தில்  கண்டுபிடித்தால், அதன் பரவலைப் பெருமளவில் கட்டுப்படுத்த முடியும் என  நிபுணர்கள் கூறி உள்ளனர். எனவே, பரிசோதனையின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்,’’ என உரையாற்றினார்.