ரஃபேல் ஆவணங்கள் விவகாரம்: ஊடகங்கள் மீது கை வைத்தால் பாஜகவுக்கு பேரழிவு! சுப்பிரமணியசாமி எச்சரிக்கை

டில்லி:

ஃபேல் ஆவனங்கள் வெளியானது தொடர்பாக எந்தவொரு ஊடகம் மீது வழக்கு போட வேண்டாம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தி இந்து உள்பட  எந்தவொரு ஊடகத்துக்கும் எதிராக அரசாங்க ரகசியங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தாலும், தற்போதைய நாடாளுமன்ற தேர்தல் சூழ்நிலையில், அது பாஜகவுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை செய்துள்ளார்.

ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக, சில திடுக்கிடும் தகவலைகளை ஆதாரத்துடன்  இந்து பத்திரிகை ஆசிரியர் ராம் வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், உச்சநீதி மன்றத்தில் நடை பெற்ற ரஃபேல் தொடர்பான வழக்கின் நேற்றைய விசாரணையின்போது, ரஃபேல் ஆவனங்கள் திருடு போய்விட்டதாக கூறிய மத்திய அரசு, ‘ பத்திரிக்கையாளர் என்.ராம் கட்டுரையில் வெளியான ஆவணங்களை திருட்டு ஆவணங்களாக கருத வேண்டும், அதை ஏற்றுக்கொள்ள கூடாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த ஆவணங்களை வெளியிட்ட பத்திரிக்கையாளர் என்.ராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஆனால் திருட்டு ஆவணங்களாக இருந்தாலும் அதை விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், சுப்பிரமணியசாமி ஊடகங்கள் மீது கை வைக்காதே என்று பாஜகவுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.