குடும்ப திருமணத்தில் உறவினர்களிடம் பந்தா காட்ட கார்களை திருடிய டில்லி இளம்பெண் கைது

டில்லி:

னது சகோதரன் திருமணத்தின்போது, பந்தாவாக கலந்துகொண்டு, உறவினர்களை கவரும் நோக்கில் கார் திருடிய இளம்பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேர் டில்லியில் கைது செய்யப்பட்டனர். இதுபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து டில்லி துணைபோலீஸ் ஆணையர் (மேற்கு) மோனிகா பரத்வாஜ் கூறியதாவது,

டில்லியை சேர்ந்த டாக்சி டிரைவர் சுபம் சர்மா என்பவர், தன்னிடம் இருந்த காரை 2 பெண்கள், 1 ஆண் உள்பட 3 பேர் சேர்ந்து துப்பாக்கி முனையில் கடத்தி சென்றுவிட்டதாக கூறியிருந்தார். அவர் கொடுத்த புகாரில், கடந்த 4ந்தேதி டெக்ராடுனில் இருந்து பழம் பகுதிக்குகு சென்று திரும்ப கார் வாடகைக்கு  வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றதாகவும், டில்லியில் உள்ள மூல்சந்த் மேம்பாலம் அருகே அந்த 3 பேரும் துப்பாக்கி முனையில் தன்னிடம் இருந்து காரை பறித்து சென்றுவிட்டதாகவும் கூறி உள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார்,  ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த, சக்ரதர்பூரை சேர்ந்த  கஸாலா மற்றும் சப்னா என்ற 26 வயதுடைய பெண்களை கண்டுபிடித்தனர். இவர்கள் டில்லி சங்கம் விஹாரில் வசித்து வருகின்றனர். இவர்களை கண்காணித்து வந்த நிலையில்,   கடந்த சனிக்கிழமையன்று கேசோபூர் மண்டிக்கு அருகே அவர் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 2 பேரை  மடக்கி கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, அவர்கள் இருவரும்  வர்மா மற்றும் சப்னா என அடையாளம் காணப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

மேலும்,  அவர்கள் உபயோகப்படுத்திய மோட்டார் சைக்கிளும் திருடப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் நடைபெற்ற மேல்விசாரணையின்போது,  , சப்னா ஜாரகண்ட் மாநிலத்தை சேர்ந்த ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும், கடந்த 2009ம் ஆண்டு அவருக்கு திருமணம் ஆனதும் தெரிய வந்துள்ளது.

ஆனால், கணவருடன் ஏற்பட்ட தகறாறு காரணமாக தனியாக வசித்து வரும் சப்னா,  தனது சகோதரர் திருமணம் ஜார்கண்டில் நடைபெற இருப்பதாகவும், அங்கு பந்தாவாக சென்று தனது உறவினர்களிடம் தனது செல்வாக்கை காட்டும் வகையில்,  ரூர்க்கேவை சேர்ந்த  வர்மா மற்றும் அவரது நண்பன் காஜல் ஆகியோரின் உதவியுடன் அவர் காரைக் திருடியதாக கூறி உள்ளார். மேலும் அதற்காக டில்லி  ‘ரஜ்பூர் நகர் நகரிலிருந்து ஒரு துப்பாக்கியை வாங்கியதாகவும்  சப்னா ஒப்புக் கொண்டார்.

கொள்ளையடித்த காரை  அவர்கள் சங்கம் விஹாரில் வர்மாவின் வீட்டிற்கு  எடுத்து வந்து, அங்க காரின் பதிவு எண் தகட்டை மாற்றி உள்ளதாகவும் போலீசார் கூறினார்.

மீட்கப்பட்ட அந்த காரில்,  ஜிபிஎஸ் பொருத்தப்பட்டிருந்ததால், காரை ஜிபிஎஸ்  உதவியுடன் ஈசியாக கண்டு பிடிக்கப்பட்டதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.