ரெயில் பாதையில் சுவர் கட்டி விளம்பரம்…வருவாயை அதிகரிக்க ரெயில்வே திட்டம்

டில்லி:

வருவாயை அதிகரிக்கும் வகையிலான புதிய திட்டங்களை இந்திய ரெயில்வே துறை செயல்படுத்தி வருகிறது. செலவுகளை குறைத்தல் மூலம் வருவாயை மிச்சப்படுத்தும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அதிவிரைவு வழித்தடங்களில் தண்டவாளத்தின் இருபுறமும் பாதுகாப்புக்காக சுவர் எழுப்ப ஏற்கனெவே முடிவு செய்யப்பட்டது.

இந்த சுவரில் விளம்பரங்கள் செய்ய அனுமதிப்பதன் மூலம் வருவாயை ஈட்டலாம் என ரெயில்வே திட்டமிட்டுள்ளது. 7 முதல் 8 அடி உயரத்தில் கட்டப்படும் இந்த சுவர்கள் தண்டவாளத்தில் ரெயில் செல்லும் போது ஏற்படும் சப்தத்தையும் குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை &டில்லி அதிவேக தடத்தில் இந்த புதிய திட்டம் அமல் படுத்தப்படவுள்ளது. குடியிருப்பு பகுதி சுவர்களில் விளம்பரம் செய்ய அதிக கட்டணமும், இதர பகுதிகளுக்கு சாதாரண கட்டணமும் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.